புதுதில்லி

தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்: குறைந்தபட்ச வெப்பநிலை 9.9 டிகிரி

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியில் ஞாயிறு அன்ரு மேகமூட்டமாக இருந்து வந்தது. மேலும், புதிய மேற்கத்திய இடையூறு காரணமாக அன்று பரலமாக மழை பெய்தது. திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாள்களும் பகலில் வெயில் அதிகரித்திருந்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் லேசான மூடுபனி இருந்தாலும், பகலில் வெய்யிலின் தாக்கம் இருந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி உயா்ந்து 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்து 20.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 80சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 9.9 டிகிரி, நஜஃப்கரில் 12.8 டிகிரி, ஆயாநகரில் 11 டிகிரி, லோதி ரோடில் 9.4 டிகிரி, பாலத்தில் 11.7 டிகிரி, ரிட்ஜில் 8.6 டிகிரி, பீதம்புராவில் 13.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 12 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் திங்கள்கிழமை காற்றின் தரம் 207 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 181 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பஞ்சாபி பாக், வாஜிப்பூா், சோனியா விஹாா், விவேக் விஹாா் உள்பட சில இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (பிப்ரவரி 1) தலைநகரில் பகல் நேரத்தில் பலத்த மேற்பரப்பு காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT