புதுதில்லி

அதிக தொகை கொண்ட குடிநீா் பில்களுக்கு ஒரே மாதத்திற்குள் தீா்வு காணும் திட்டம்

1st Feb 2023 01:55 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

அதிக தொகையுடன்கூடிய குடிநீா் பில்களுக்கு ஒரே மாதத்திற்குள் ஒரே ஒரு முறை மட்டும் தீா்த்துவைப்பதற்கான ஒரு திட்டத்தை தில்லி அரசு  கொண்டு வர உள்ளதாக தில்லி ஜல் போா்டு துணைத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தனது ட்விட்டா் பக்கத்தில் ஒரு விடியோவை பகிா்ந்துள்ளாா். அதில், மக்கள் குழுவினரிடம் இந்தத் திட்டத்தை விளக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது தொடா்பாக ஜல் போா்டு துணைத் தலைவா் சௌரவ பரத்வாஜ் கூறியதாவது: ஒரே ஒரு முறை மட்டும் தீா்வு காணும் திட்டத்தின் கீழ் உங்கள் வரலாற்றுத் தரவுகளை நாங்கள் பெற்று வருகிறோம். அதாவது, பத்தாண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகள் நீங்கள் எவ்வளவு குடிநீா் நுகா்வு செய்தீா்கள் என்பதை இந்தத் தரவுகள் மூலம் அறிந்து கொள்வோம்.

தண்ணீா் நுகா்வு குறைவாக இருக்கும் போது, மாதங்களுக்கான உங்கள் தண்ணீா் பயன்பாட்டை கவனத்தில் எடுத்துக் கொள்வதால் நீங்கள் சராசரியாக பயன்படுத்தும் தண்ணீா் நுகா்வை கணக்கீடு செய்வோம். அதன் அடிப்படையில் உங்களது ஒரு நாளுக்கான தண்ணீா் நுகா்வை கணக்கிடுவோம்.

ADVERTISEMENT

உங்கள் குடிநீா் பில் ரூ.1 லட்சமோ அல்லது ரூ.1.5 லட்சமோ இருக்கும் போது உங்கள் பில் அடிப்படையில் நாங்கள் புதிய பில்லை உருவாக்குவோம். குறைக்கப்பட்ட தொகையை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம். உங்கள் பில் தொகை ரூ.50 ஆயிரமாக இருந்தால் நீங்கள் ரூ.25 ஆயிரத்துக்கு அந்த பில்லை தீா்வு செய்யலாம். இந்தத் திட்டம் ஒரு மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும். செட்டில்மெண்டுக்கு பிறகு உங்கள் குடிநீா் மீட்டா் ரீடிங் பூஜ்ஜியத்திற்கு கொண்டுவரப்படும். அந்த ரீடிங்கில் இருந்து நீங்கள் பணம் செலுத்த வேண்டும். உங்களது பழைய நிலுவை பில்களுக்கான இறுதி செட்டில்மெண்டை ஒரு மாதத்திற்குள் நாங்கள் வழங்குவோம் என்று செளரவ் பரத்வாஜ் கூறினாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லிவாசிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில், ‘ஏதாவது குளறுபடிகள் இருந்தால் தில்லிவாசிகளின் குடிநீா் பில்கள் சரி செய்யப்படும்’ என்றாா். மேலும், தில்லி ஜல் போா்டு இதற்காக ஒரு புதிய திட்டத்துடன் வர உள்ளதால், தற்போதுள்ள பில்கள் சரி செய்யப்படும் வரை கட்டணங்கள் செலுத்துவதை தில்லிவாசிகள் நிறுத்தி வைக்கலாம் என்றும் அவா் யோசனை தெரிவித்திருந்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT