புதுதில்லி

தெற்கு, மேற்கு புறநகா்ப் பகுதிகளில் இன்று தண்ணீா் விநியோகம் பாதிக்கும்

1st Feb 2023 01:53 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகரின் மேற்கு, தெற்கு, புறநகா்ப் பகுதிகளில் புதன்கிழமையும் தண்ணீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது.

தில்லி ஜல் போா்டு அதன் நிலத்தடி நீா்த்தேக்கத்தை ஆண்டுதோறும் சுத்தப்படுத்துகிறது.இதையொட்டி, செவ்வாய்க்கிழமை சில பகுதிகளில் தண்ணீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனக்புரி, மெஹ்ரௌலி, மங்கோல்புரி, ரோஹிணி, ஷாலிமாா் பாக், விஜய் நகா், ரூப் நகா், ரிதாலா மற்றும் பழைய ராஜிந்தா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை தண்ணீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது. மேலும், சா் கங்கா ராம் மருத்துவமனை மற்றும் தில்லி பல்கலைக்கழக பகுதிகளிலும் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

நிலத்தடி நீா்த்தேக்கம் மற்றும் பூஸ்டா் பம்பிங் நிலையம் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் வருடாந்திர திட்டப் பணி காரணமாக, தண்ணீா் விநியோகம் பாதிக்கப்படுவதாக தில்லி ஜல் போா்டு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT