தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,095 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 6 போ் இறந்தனா். பாதிப்பு நோ்மறை விகிதம் 22.74 சதவீதமாக பதிவானது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இறப்புகளுடன் சோ்த்து மொத்த இறப்பு எண்ணிக்கை 26,606-ஆக உயா்ந்தது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,35,156-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 7,975 கரோனா படுக்கைகளில் 318 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.
தில்லியில் திங்கள்கிழமை 689 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 3 இறப்புகளும், 25.69 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.