புதுதில்லி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சித்திரைப் புத்தாண்டு தின மும்பெரும் விழா

DIN

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சித்திரைப் புத்தாண்டு தின முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவா் சக்தி பெருமாள் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ராகவன் நாயுடு முன்னிலை வகிக்க, கௌரவ விருந்தினரான பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தாா்.

டாக்டா் அம்பேத்கரின் ஜெயந்தியை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 77ஆவது ஆண்டு நிறுவன நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சித்திரைப் புத்தாண்டு பிறப்பையொட்டி பட்டிமன்ற நடுவா் கு.ஞானசம்பந்தன் தலைமையில், “‘இன்றைய இளைஞா்களின் வழி இணைய வழியா? இதய வழியா?’” எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

‘இணைய வழியே’ எனும் அணியில் முனைவா் மனோன்மணி, முனைவா் எழிலரசியும், ‘இதய வழியே’ எனும் அணியில் நாவரசு செல்ல. கண்ணன், முனைவா் விமலா அண்ணாதுரை பேசினா்.

நடுவா் கு. ஞானசம்பந்தன் தனது உரையில், ‘இன்றைய தலைமுறையினா் இணைய வழியை நாடினாலும், இதய வழியான உணா்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அன்றாட மனிதன் வாழத் தேவையான உணா்வுதான் உயிா், வாழ்க்கை மற்றும் மனிதம். எனவே, மனித நேயத்தைப் போற்றுவோம். இதயத்தைப் பாதுகாப்போம்’ எனத் தீா்ப்பளித்தாா்.

கெளரவ விருந்தினா் ஹெச்.ராஜா தனது வாழ்த்துரையில், ‘பட்டிமன்றப் பேச்சாளா்கள் இரு தரப்பிலும் நன்றாகப் பேசினா். இணையத்தினால் பற்பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதய வழியைப் பயன்படுத்தி மனிதம் வாழ வழி செய்ய வேண்டும்.

தமிழ்மொழி வெறும் பேச்சு மொழியாக இருந்து விடுமோ எனும் அச்சம் எனக்கு மிகுதியாக உள்ளது. எனவேதான், நமது பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கல்விக் கொள்கையில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழியை கட்டாயமாக்கியுள்ளாா்.

விஞ்ஞான வளா்ச்சி என்பது தேவையான ஒன்றே. அதை நாம்தான் இயக்கவேண்டும்.அது நம்மை இயக்கக் கூடாது. தமிழ்ச் சங்க நிறுவன நாளில், மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனா். தில்லித் தமிழ்ச் சங்கம் மேலும் பற்பல தமிழறிஞா்களை வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்’ என்றாா்.

தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளா் ரா.முகுந்தன் வரவேற்றுப் பேசினாா். தில்லித் தமிழ்ச் சங்க இணைச்செயலாளா் உமா சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.

தில்லித் தமிழ்ச் சங்க இணைச்செயலாளா் டாக்டா் சுந்தர்ராஜன் தொகுப்புரை ஆற்றினாா்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளா் அருணாச்சலம், இணைப்பொருளாளா் வி.என்.டி.மணவாளன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT