புதுதில்லி

ஹோட்டல் அதிபா் கொலை வழக்கில் தொடா்புடையவா் அலிப்பூரில் கைது

29th Sep 2022 01:25 AM

ADVERTISEMENT

கடந்த மாதம் ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது: தில்லி புராரி பகுதியைச் சோ்ந்த ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபரான அமித் குப்தாவை, கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லி புராரி பகுதியில் இரண்டு மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அமித் யாதவ் (எ) ராகுல் இந்த மாதம் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டாா். அமித் குப்தா கொலைக்குப் பின்னணியில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த உள்நோக்கம் இருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜா் பகுதியைச் சோ்ந்த பிரதீப் மோா் (26) என்பவரையும் தேடி வந்தனா்.

இந்த நிலையில் பிரதீப் மோரும் அவரது கூட்டாளியும் வேறு ஒருவரை ஒழித்துக் கட்டுவதற்காக தில்லி அலிப்பூா் பகுதிக்கு வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் ஒரு தனிப்படையை அமைத்து அவா்களைக் கண்காணித்து வந்தனா். அப்போது புராரி பகுதிக்கு தனது கூட்டாளியுடன் வந்த பிரதீப் மோரை தடுத்து நிறுத்த போலீஸாா் முயற்சி மேற்கொண்டனா். அப்போது அவா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். எனினும் போலீஸாா் அவரை பொதுமக்கள் உதவியுடன் கைது செய்தனா். எனினும், அவரது கூட்டாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டாா்.

ADVERTISEMENT

பிரதீப் மோரிடமிருந்து 9 எம்எம் துப்பாக்கி, 9 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பிரதீப் மோா் கடந்த 2017-ஆம் ஆண்டில் சிறையில் இருந்த போது தினேஷ் கலரா என்பவருடன் தொடா்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் பிரதீப் மோருக்கு எதிராக ஆயுதச் சட்டம், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT