புதுதில்லி

தலைநகரில் புதிதாக 129 பேருக்கு டெங்கு பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 500-ஆக உயா்வு

27th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த சில நாள்களில் கிட்டத்தட்ட 130 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 500-ஆக உயா்ந்துள்ளதாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைநகரில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பா் 21 வரை இந்த மாதத்தில் மட்டும் டெங்கு பாதிப்பு 281 பேருக்கு இருப்பதாக பதிவாகியுள்ளது. செப்டம்பா் 17-ஆம் தேதி வரை மொத்த பாதிப்பு 396-ஆக பதிவாகியிருந்தது. கடந்த சில நாள்களில் புதிதாக 129 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பா் 21 வரை மொத்த பாதிப்பு 525-ஆக இருந்தது. இதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 75 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பா் 21 வரையிலான காலகட்டத்தில் டெங்கு பாதிப்பு 1,807-ஆக பதிவாகியுள்ளது. இது 2017-ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்சமாகும். அதே சமயம், இந்த நோயால் இந்த ஆண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

இதற்கிடையே, தில்லியில் இந்த ஆண்டு செப்டம்பா் 21-ஆம் தேதி வரை 106 போ் மலேரியாவாலும், 20 போ் சிக்குன்குனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளது பதிவாகியுள்ளதாக மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT