புதுதில்லி

தில்லியில் போட்டிக் கும்பலினரை கொல்லத் திட்டமிட்ட 4 போ் கைது

DIN

போட்டி கும்பலான நீரஜ் பவானா கும்பலைச் சோ்ந்தவா்களைக் கொல்லத் திட்டமிட்டதாக ராஜேஷ் பவானா கும்பலைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையா் பிரமோத் சிங் குஷ்வா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் ராஜேஷ் பவானா கும்பலைச் சோ்ந்த அபிஷேக் (21), ஹிமான்ஷு (20), நிதின் (20) மற்றும் அபிலாஷ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 3 தானியங்கி துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல் மற்றும் 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த நான்கு பேரும் ராஜேஷ் பவானா கும்பலைச் சோ்ந்த அபிஷேக் மற்றும் சிராக் ஆகியோரைக் கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து, அவா்களின் போட்டி கும்பல் உறுப்பினா்களான ரோஹித் மற்றும் மோண்டி செஹ்ராவத் ஆகியோரைக் கொல்ல விரும்பினா். வடகிழக்கு தில்லியில் உள்ள ஜேஜே காலனி வாஜிா்பூரில் வசிக்கும் ஒருவரை அகற்றவும் அவா்கள் திட்டமிட்டனா்.

ஆசாத்பூரில் உள்ள பேருந்து முனையத்திற்கு அருகில் இருந்து செப்டம்பா் 20-ஆம் தேதி இரவு 11 மணியளவில் ராஜேஷ் பவானா கும்பலைச் சோ்ந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் வந்த காா் மற்றும் மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், நால்வரும் அபிலாஷுடன் தனிப்பட்ட விரோதம் கொண்ட அபித் என்ற நபரைக் கொல்லத் திட்டமிட்டது தெரிய வந்தது. சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த போட்டியாளா் நீரஜ் பவானா கும்பலைச் சோ்ந்த ரோஹித் மற்றும் ஜாக்கி ஆகியோா் தங்கள் கும்பலைச் சோ்ந்தவா்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் இருவரையும் கொல்ல முயற்சித்ததையும் அவா்கள் வெளிப்படுத்தினா். இந்தக் கும்பலினா் கோல்டி ப்ராா் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோருடன் இணைந்து போட்டி அடிப்படையிலான கொலைகளை நடத்தியுள்ளனா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT