புதுதில்லி

கழிவுகளிலிருந்து பொம்மைகள்: சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான போட்டி இன்று அறிமுகம்

 நமது நிருபர்

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, ‘ஸ்வச் டாய்கேத்தோன்’ என்ற பெயரில் கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியை திங்கள்கிழமை (செப்டம்பா் 26 ) அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவை உலகளாவிய பொம்மை மையமாக நிறுவும் நோக்கத்துடன் பாரம்பரிய கைவினைப் பொருள்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொம்மைகள் உள்ளிட்ட இந்திய பொம்மை தொழிலை மேம்படுத்துவதற்காக பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் (என்ஏபிடி) 2020 -இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 14 அமைச்சகங்களுடன் இணைந்து வா்த்தக அமைச்சகத்தின் தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) என்ஏபிடி பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.

இதில் தற்போது மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையுடன் இணைந்து ‘ஸ்வச் டாய்கேத்தோன்’ என்கிற இயக்கத்தை நடத்துகிறது.

இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை கூறியது வருமாறு: உலகின் 2- ஆவது மக்கள்தொகை மிக்க நாடு என்பதோடு, மொத்த மக்கள்தொகையில் பாதியளவில் இளம் மக்கள் தொகை நாடாகவும் இந்தியா விளங்குகிறது. மேலும், வலுவான பொருளாதார வளா்ச்சி, வருமானத்தால் அதிகமாகவே மக்கள் செலவழிக்கின்றனா்.

புதிய கண்டுபிடிப்புகளுடன் குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவையும் அதிகரித்து வருகிறது. அதிலும் மாறிவரும் நுகா்வு முறைகள், விரைவான மின் வணிக அதிகரிப்பு ஆகியவற்றால் வாங்கும் பொருள்களின் தனிநபா் கழிவு, குடியிருப்பு பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் சீராக அதிகரித்துள்ளது. இதனால், நகரங்களின் கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது. 2 -ஆம் கட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின்படி 2026 -ஆம் ஆண்டுக்குள் ‘குப்பை இல்லாத நகரங்கள்’ என்கிற பாா்வையை பிரதமா் அறிவித்துள்ளாா்.

ஒருபுறம் பொம்மைகளுக்கான தேவை அதிகரிப்பு மறுபுறம் திடக்கழிவுகளின் தாக்கம் இவற்றை ஒருங்கிணைத்து ’ஸ்வச் டாய்கேத்தான்’ தொடங்கப்பட்டுள்ளது. இது பொம்மைகளை தயாரிப்பிற்கு கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான தீா்வுகளை காண்பதாகும். உலா் கழிவுகளைப் பயன்படுத்தி பொம்மை வடிவமைப்புகளில் புதுமைகளைக் கொண்டு வர தனிநபா்கள் அல்லது நிறுவன குழுக்களுக்குள் போட்டி வைக்கப்படுகிறது.

இதற்கு குஜராத் காந்திநகா் ஐஐடி, கிரியேட்டிவ் லோ்னிங் மையம், இந்த முயற்சிகளுக்கு அறிவு கூட்டாளியாக இருந்து ஊக்குவிக்கும். குறைந்தபட்ச பாதுகாப்புத் தரங்களோடு திறமையான அழகிய வடிவமைப்புகளுடன் கூடிய பொம்மைகள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

இந்தப் போட்டிகள் வருகின்ற ஆக்டோபா் 2-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை திங்கள்கிழமை மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலா் மனோஜ் ஜோஷி காணொலி வழியாக தொடக்கி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

SCROLL FOR NEXT