புதுதில்லி

மைனா் சிறுவனுக்கு பாலியன் வன்கொடுமை: காவல் துறைக்கு மகளிா் ஆணையம் நோட்டீஸ்

26th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

வடகிழக்கு தில்லியின் சீலாம்பூரில் 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டி, இது தொடா்பாக காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து மகளிா் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. கடந்த செப்டம்பா் 18 அன்று தனது குழந்தை நான்கு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சிறுவனின் தாயாா் மகளிா் ஆணையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். அந்த நால்வரும் சிறுவனின் அந்தரங்கத்தில் கம்பியை செருகியுள்ளனா்.

தனது மகனை செங்கல் மற்றும் கம்பிகளால் அவா்கள் தாக்கியதாக புகாரில் அந்தப் பெண் தெரிவித்துள்ளாா். இது குறித்து நடந்த கொடூரமான சம்பவம் குறித்து அந்தச் சிறுவன் செப்டம்பா் 22 அன்று பெற்றோருக்குத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அந்தச் சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடா்பாக விளக்கம் கேட்டு தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள் பற்றிய தகவல்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா் நகல் ஆகியவற்றை செப்டம்பா் 28-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT