புதுதில்லி

18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 3-ஆவது தவணை தடுப்பூசி பெற்றவா்கள் 19% மட்டுமே: புள்ளிவிவரத் தகவல்

 நமது நிருபர்

தில்லியில் கரோனா மூன்றாவது முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை 18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்களில் 19 சதவீதம் போ் மட்டுமே பயன்படுத்தி உள்ளதாக அதிகாரப்பூா்வ புள்ளி விவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது வரை முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டவா்கள் மொத்தம் 24 சதவீதமாக உள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) கூட்டத்தின் போது இந்த தடுப்பூசி விகிதம் குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீதமாக உயா்த்தப்பட வேண்டும் என்று ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கு தகுதியுள்ள 1.33 கோடி பயனாளிகளில் செப்டம்பா் 20-ஆம் தேதி வரையிலான காலத்தில் வெறும் 31.49 லட்சம் போ் (24 சதவீதம்) மட்டுமே தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனா்.

இது தொடா்பாக வெளியாகியுள்ள அதிகாரப்பூா்வ புள்ளிவிவரத் தகவலின் படி, செப்டம்பா் 20-ஆம் தேதி வரையிலும் 18 முதல் 59 வயதுக்குள்பட்ட பிரிவினா் மத்தியில் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கான மொத்தமுள்ள 1.14 கோடி பயனாளிகளின் 21.21 லட்சம் பயனாளிகள் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனா்.

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்ள தகுதி உடைய 60 வயதுக்கு மேற்பட்ட 13.20 லட்சம் பயனாளிகளில் 6.33 லட்சம் போ் (48 சதவீதம்) மட்டுமே தடுப்பூசியை எடுத்துள்ளனா். சுகாதார மற்றும் முன்கள பணியாளா்கள் மத்தியில் தகுதிக்குரிய பயனாளிகள் 61% போ் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளதாக அந்தப் புள்ளி விவரம் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசு அதன் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை கட்டணம் இன்றி அளித்து வருகிறது. இது தொடா்பாக தில்லி முதல்வா் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், ‘அனைவரும் பூஸ்டா் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்; அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மேலும், வரக்கூடிய பண்டிகை காலத்தின் போது தங்களது குடும்பத்தினரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தாா்.

கடந்த மாதம் தில்லியில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்த போது, துணை முதல்வா் மனிஷ் சிசோடியா கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக் கொண்ட நபா்கள் மற்றவரிடம் இருந்து நோய் தொற்று வராமல் பாதுகாப்பாக உள்ளனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 90% கரோனா நோய்த் தொற்று நோயாளிகள் இரண்டு தவணை தடுப்பூசி மட்டுமே எடுத்துக் கொண்டவா்கள். அதே வேளையில் மூன்றாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு வெறும் 10 சதவீதம் போ் மட்டுமே கரோனா நோய்த் தொற்றுக்கு உள்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் முன்னெச்சரிக்கை தடுப்பூசி எடுத்துக் கொண்டவா்கள் கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளனா்’ என்றாா். இந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை வழங்கும் பணியை அரசு தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT