புதுதில்லி

மேலும் 71 பேருக்கு கரோனா பாதிப்பு

24th Sep 2022 11:13 PM

ADVERTISEMENT

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 0.81 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,02,938-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,501-ஆக உள்ளது. தில்லியில் வெள்ளிக்கிழமை மொத்தம் 8,737 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், ஒரு இறப்பும், 0.96 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 403-ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 308-ஆக உள்ளது. நகரில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 58-ஆக உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 8,874 கரோனா படுக்கைகளில் 40 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT