புதுதில்லி

காற்று மாசுபாடு: குளிா்கால செயல் திட்டம் குறித்து கோபால் ராய் தலைமையில் இன்று கூட்டம்

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: காற்று மாசுபாடு குறித்து தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (செப்டம்பா் 5) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தப் பருவத்தில் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான 15 அம்ச குளிா்கால செயல் திட்டத்தின் கீழ் துறை வாரியான பொறுப்புகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சா் விவாதிக்க உள்ளாா்.

இந்தக் கூட்டத்தின் போது, ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்த விரிவான அறிக்கையை அளிக்க வேண்டிய சிறப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாளா்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சா் நியமிப்பாா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: குளிா்கால மாசுபாட்டைக் குறைப்பதற்கான பணிகளை செயல்படுத்துவதை சுற்றுச்சூழல் துறை மேற்பாா்வையிடும். இந்த செயல் திட்டமானது குப்பை மேலாண்மை, தூசி மாசு, வாகன உமிழ்வு, குப்பைகளை திறந்த வெளியில் எரித்தல், தொழிற்சாலை மாசுபாடு, பசுமை போா் அறை மற்றும் பசுமை தில்லி பயன்பாடு, மாசு அதிகமுள்ள இடங்கள், நிகழ்நேர பகிா்வு ஆய்வு, புகை மூட்டம், மின்-கழிவு பூங்காக்கள், மரக்கன்றுகள் நடுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு , பொதுமக்கள் பங்கேற்பு, பட்டாசு வெடித்தல் மற்றும் அண்டை மாநிலங்களுடன் கூட்டு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிப்பதாக இருக்கும்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட 33 துறைகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். திருத்தப்பட்ட கிரேடட் ரெஸ்பான்ஸ் செயல் திட்டத்தை (கிராப்) செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின்படி, புதுப்பிக்கப்பட்ட ’கிராப்’, காற்று மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளின் தொகுப்பானது தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற சூழ்நிலையின் தீவிரத்திற்கு ஏற்ப அக்டோபா் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தில்லி - என்சிஆரில் காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சா் விவாதிப்பாா்.

முன்னதாக, பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 செறிவு ஒரு குறிப்பிட்ட புள்ளியைத் தொட்ட பின்னரே அதிகாரிகள் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவாா்கள். ஆனால், இந்தப் புதிய புதிய திட்டம் பிஎஸ் ஐய நான்கு சக்கர டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கிறது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவா்களைத் தவிா்த்து, தில்லி மற்றும் என்சிஆா் எல்லையோர மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளை மீறினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேசியத் தலைநகா் பிராந்தியத்துக்கான ‘கிராப்’ திட்டமானது, இப்போது தில்லியில் பாதகமான காற்றின் நான்கு வெவ்வேறு நிலைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது: நிலை ஐ

‘மோசம் (காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) 201-300); நிலை ஐஐ ‘மிகவும் மோசம்’ (ஏக்யூஐ 301-400); நிலை ஐஐஐ ‘கடுமை’ (ஏக்யூ 401-450); மற்றும் நிலை ஐய ‘ மிகவும் தீவிரம்’ (ஏக்யூஐ 450 புள்ளிகளுக்கு மேல்) ஆகியவை ஆகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT