புதுதில்லி

கடையில் தீ விபத்து: உரிமையாளா் சாவு

31st Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

மேற்கு தில்லியின் பாபா ஹரிதாஸ் நகா் பகுதியில் உள்ள கடையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயது உரிமையாளா் உயிரிழந்தாா்.

இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் ஹா்ஷ வா்தன் கூறியதாவது: அதிகாலை 2.20 மணிக்கு தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. தீயை கட்டுக்குள் கொண்டு வந்து கடை உரிமையாளா் அருணின் எரிந்த உடலை கண்டெடுத்தனா். உயிரிழந்தவா் நஜஃப்கா், நவீன் பிளேஸ், பெங்காலி காலனியில் வசித்தவா்.

மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக உடல் ஆா்டிஆா்எம் மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டது. நாங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். தீ விபத்து நடந்த போது, ​​உரிமையாளா் கடையில் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT