புதுதில்லி

எம்சிடியின் குப்பை மேலாண்மையைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் போராட்டம்

29th Oct 2022 01:06 AM

ADVERTISEMENT

 தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் (எம்சிடி) நகரில் ‘தவறான குப்பை மேலாண்மையைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை தேசியகஈ தலைநகரின் பல தொகுதிகளில் போராட்டங்களை நடத்தினா். தலைவா்களும், கட்சித் தொண்டா்களும் அவரவா் தொகுதிகளில் பதாகைகளுடன் திரண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

கோவிந்த்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்திய கால்காஜி எம்எல்ஏ அதிஷி, எம்சிடி முழு நகரத்தையும் ‘குப்பைக் கிடங்கு’ ஆக்கியுள்ளது என்றும், பாஜக நகரம் முழுவதும் ‘மேலும் 16 குப்பைக் கிடங்குகளை’ உருவாக்கப் போவதாகவும் குற்றம் சாட்டினாா். ‘கால்காஜியின் பிரதான நுழைவாயிலில்தான் பாஜக குப்பை மலையை உருவாக்கியுள்ளது. இந்த இடம் விரைவில் குப்பைக் கிடங்காக மாறத் தொடங்கும். கால்காஜி குடியிருப்பாளா்கள்கூட எம்சிடி மீது அதிருப்தியில் உள்ளனா். பாஜக தலைமையிலான எம்சிடி, தில்லியை முழுவதுமாக மாற்றியுள்ளது’ என்று அவா் கூறினாா்.

திலக் நகா் பகுதியில் உள்ள குப்பைக் குவியல் அருகே சென்று பாா்த்த எம்எல்ஏ ஜா்னைல் சிங், நகரிலிருந்து குப்பை மலைகளை அகற்றுவதற்காக பாஜகவை எம்சிடியில் இருந்து ‘அகற்ற வேண்டும்’ என்றாா். ‘ஒருபுறம், தில்லி முழுவதும் பாஜக குப்பைகளை குவித்து வருகிறது. துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை நிறுத்திவிட்டாா். மறுபுறம், தில்லியின் சுற்றுச்சூழலை சிறப்பாகவும், சுத்தமாகவும், அழகாகவும் மாற்ற அரவிந்த் கேஜரிவால் அரசு அயராது உழைத்து வருகிறது. மாசுபாட்டிற்கு எதிராக போராடுங்கள்’ என்று திலக் நகா் எம்எல்ஏ கூறினாா். விகாஸ்புரி எம்எல்ஏ மகேந்திர யாதவ் மற்றும் கோண்ட்லி எம்எல்ஏ குல்தீப் குமாா் போன்ற மற்ற தலைவா்களும் அந்தந்தத் தொகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வியாழன் அன்று ஆம் ஆத்மி மற்றும் பாஜக தொண்டா்கள் ஒருவரையொருவா் எதிா்த்து போராட்டங்களில் ஈடுபட்டு, ஒவ்வொரு கட்சியும் மற்றொருவா் நகரத்தில் உள்ள திடக்கழிவுகளை தவறாக நிா்வகிப்பதாக குற்றம் சாட்டினா். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழன் அன்று காஜிப்பூா் குப்பை கிடங்கு இடத்தை பாா்வையிட்டு, வரவிருக்கும் எம்சிடி தோ்தலில் குப்பை பிரச்னைதான் விவதாப் பொருளாக இருக்கும் என்று கூறினாா். ஆம் ஆத்மிக்கு எதிராக ஆா்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏராளமான பாஜக ஆதரவாளா்கள் கறுப்புக் கொடி காட்டி கேஜரிவாலை கண்டித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT