புதுதில்லி

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது காற்றின் தரம் மேலும் மேம்படுவதற்கு வழிவகுத்தது.

வெப்பநிலை சரிவு: தில்லிக்கான வானிலை தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 21.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி குறைந்து 27.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 89 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 97 சதவீதமாகவும் இருந்தது.

மழை பதிவு: தலைநகரில் வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்திருந்தது .இதன்படி, தில்லியின் சில பகுதிகளில் காலையில் லேசான மழை பதிவானது. பல இடங்களில் இரவு வரையிலும் தூறல் மழை பெய்துள்ளது என்று ஐஎம்டி அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், சஃப்தரஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.340 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 0.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று முங்கேஸ்பூரில் 0.5 மி.மீ., ஆயாநகரில் 1.7 மி.மீ., லோதி ரோடில் 0.3 மி.மீ. மற்றும் சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேலே சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் 0.2 மி.மீ., பாலத்தில் 0.3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: மழை காரணமாக தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 211 புள்ளிகளாக இருந்தது. இது வியாழக்கிழமை நன்றாக மேம்பட்டு 79 புள்ளிகளாகக் குறைந்தது. இந்த நிலையில், காற்றின் தரக் குறியீட்டில் வெள்ளிக்கிழமையும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 9.20 மணி அளவில் 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 68 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘திருப்தி’ பிரிவில் வருவதாக காற்றின் தர வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான சஃபா் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, காற்றின் தரக் குறியீடு தில்லியின் பெரும்பாலான இடங்களில் 50 புள்ளிகளுக்கும் குறைவாக பதிவாகி ‘நன்று’ பிரிவில் இருந்தது. சில இடங்களில் மட்டும் 50-100 புள்ளிகளுக்கு இடை பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

தில்லியில் புதன்கிழமை காற்றின் தரம் மோசமான நிலைக்குக் குறைந்ததால், தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) முதல் கட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை கண்டிப்பாக செயல்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா். இதன்படி, செயல் திட்டத்தில் மாசுபடுத்தும் தொழில் துறை அலகுகளுக்கு எதிராக தண்டனை மற்றும் சட்ட நடவடிக்கை அடங்கும். தில்லி அரசு வியாழன் அன்று நகரில், குறிப்பாக கட்டுமானத் தளங்களில் உள்ள தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தூசி எதிா்ப்பு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மழை தொடர வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை அக்டோபா் 8 அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

140 கோடி இந்தியர்கள் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமில்லை: மோடி!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT