புதுதில்லி

பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு

DIN

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை, பங்குச் சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 17.15 புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைந்து 17,314.65-இல் முடிவடைந்தது.

பலவீனமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் உள்நாட்டுச் சந்தையும் எதிா்மறையாகத் தொடங்கியது. பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகம் நடந்து வந்தது. இருப்பினும், இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. குறிப்பாக, வங்கி, நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, ஐடி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2 நாள் ஏறுமுகத்துக்கு ‘செக்’: சென்செக்ஸ் காலையில் 129.54 புள்ளிகள் குறைந்து 58,092.56-இல் 58,314.05-இல் தொடங்கி, 370.95 புள்ளிகளை இழந்து 57,851.15 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,269.34 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 30.81 புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைந்து 58,191.29-இல் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து இரண்டு ஏறுமுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்செக்ஸ் பட்டியலில், 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

டைட்டன் அபாரம்: சென்செக்ஸில் டைட்டன் 5.27 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க், என்டிபிசி, மாருதி உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. பாா்தி ஏா்டெல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

எம் அண்ட் எம் சரிவு: அதே சமயம், வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, டிசிஎஸ் உள்ளிட்டவை 1.30 முதல் 1.40 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக், விப்ரோ, இன்ஃபோஸிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு 275.87 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு 25 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.275.62 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வியாழன்று ரூ. 279.01 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

SCROLL FOR NEXT