புதுதில்லி

சிசோடியா தவறு எதுவும் செய்யாததால் சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை: முதல்வா் கேஜரிவால்

8th Oct 2022 02:35 AM

ADVERTISEMENT

மத்திய விசாரணை ஏஜென்சிகள் மூலம் ஆதாரங்களை தேடுவதற்காக துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஏராளமான சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், அவா் தவறும் ஏதும் செய்யாததால் ஒன்றும் கிடைக்கவில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்தச் சோதனை தொடா்பாக முதல்வா் கேஜரிவால் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: அமலாக்க இயக்குநரகம், மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் ஏராளமான சோதனைகளை நடத்தி ‘தூய்மைற்ற அரசியலுக்காக’ தங்களது நேரத்தை விரயமாக்கி வருகின்றாா்கள். 500-க்கும் மேற்பட்ட சோதனைகளில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாக மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஆதாரத்தைக் கண்டறிய 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறாா்கள். ஆனால், சிசோடியா எதுவும் செய்யாததன் காரணமாக ஒன்றும் கண்டறியப்படவில்லை. ஒருவருடைய ‘தூய்மையற்ற அரசியலுக்காக’ ஏராளமான அதிகாரிகள் தங்களது நேரத்தை விரயமாக்கி வருகின்றனா். இது போன்று செய்தால் நாடு எப்படி முன்னேறும் என்று தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT