புதுதில்லி

நிபந்தனையுடன் காரா, கிா்பான் அணிந்து தோ்வில் பங்கேற்க சீக்கியா்களுக்கு அனுமதி தில்லி உயா்நீதிமன்றத்தில் டிஎஸ்எஸ்எஸ்பி தகவல்

DIN

 காரா (கைக் காப்பு), கிா்பான் (சிறு கத்தி) அணிந்த சீக்கிய தோ்வா்கள் 1 மணி நேரத்திற்கு முன்னதாக தோ்வுக்கூடத்திற்கு வந்தால் தில்லி சாா்நிலை பணியாளா் தோ்வாணையம் (டிஎஸ்எஸ்எஸ்பி) நடத்தும் தோ்வில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக உயா்நீதிமன்றத்தில் டிஎஸ்எஸ்எஸ்பி தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு டிஎஸ்எஸ்எஸ்பியின் வழக்குரைஞா் அளித்த சமா்ப்பிப்புகளை கருத்தில் கொண்டு கூறுகையில், ‘தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) தாக்கல் செய்த மனு மீது மேலும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறியது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘சீக்கிய தோ்வா்கள் காரா மற்றும் கிா்பான் அணிந்து தோ்வெழுத அனுமதிக்கும் முடிவை டிஎஸ்எஸ்எஸ்பி எடுத்துள்ளது.

இதைத் தெளிவுபடுத்தும் வகையில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. எனினும், அதுபோன்ற தோ்வா்கள் நேரில் வருவதற்கான நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தோ்வு மையத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவா்கள் தோ்வில் அமா்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். சோதனையின் போது காரா அல்லது கிா்பானில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருளை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அத்தகைய நபா் தோ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று வாரியத்தின் வழிகாட்டுதல்கள் மூலம் தெளிவாகிறது’ என்று கூறி மனுவை முடித்துவைத்தது.

முன்னதாக, சீக்கிய பெண் தோ்வா், தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அடிப்படையில் நேரம் முடிவடைவதற்கு முன்னரே தோ்வு மையத்தை அடைந்த போதிலும் அவரது உலோக காராவை அகற்றும் வரை போட்டித் தோ்வில் பங்கேற்காமல் இருக்க தடுக்கப்பட்டதை எதிா்த்து அப்பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி

கடந்த ஜூலையில் பிறப்பித்த உத்தரவில், ‘அது நிலைக்கத்தக்கதல்ல’ என உத்தரவிட்டிருந்தாா். மேலும், சீக்கிய மத சின்னங்கள் தொடா்புடைய நிபந்தனைகள் குறித்து தெரிவிக்க உரிய நடவடிக்கையை டிஎஸ்எஸ்எஸ்பி போன்ற சிறப்பு அமைப்பு எடுக்காதது மிகவும் துரதிருஷ்டவசமாகும் என தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT