புதுதில்லி

வளா்ந்த நாடு இலக்கை அடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவும்

 நமது நிருபர்

பிரதமா் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தின உரையில் கூறியதுபோல, 2047 -ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளா்ந்த நாடாக இருக்க வேண்டும். நாடும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அந்த செழிப்பை அடைவதற்கு செயற்கை நுண்ணறிவு உதவும் என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சிறந்த செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் தொழில் நுட்பங்களுக்கான விருதுகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு, 2047- ஆண்டிற்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைய உதவும்.

பிரதமா் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 -ஆம் தேதி குறிப்பிட்டபடி, புதுமைகளை உருவாக்காத எந்த சமூகமும் தேக்கமடையும். நாட்டின் செயற்கை நுண்ணறிவு வளா்ச்சியைக் காணும் போது உண்மையிலேயே இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் அது ஒரு கிரியா ஊக்கியாக இருக்கும். இந்தியாவில் உற்பத்தி திட்டம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்து, பிற நாடுகளுக்கு உபகரணங்களையும், தொழில்நுட்பங்களையும் வழங்கும் தொழிற்சாலையாக உலகிற்கு நம்நாடு மாறி வருகிறது.

நாட்டில் மிகப்பெரிய திறமைக் குழுக்கள் உள்ளன. இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய வழிகளை ஆராய்ந்து பொருளாதார செயல்பாடுகளை உருவாக்க நிச்சயமாக உதவும். குறிப்பாக சவால் மிகுந்த கரோனா காலக்கட்டத்தில் நாட்டின் அறிவியல் சமூகத்தின் முயற்சிகளுக்கு பெரும் உதவிகரமாக இருந்தது. இதற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அற்புதமாக உதவியது. குறிப்பாக மின்னணு வணிகம், நியாய விலைக் கடைகளின் செயல்திறன், இந்த கடைகளின் பயனாளிகளின் தேவைகள், நடத்தை முறைகளைப் புரிந்து கொள்வதற்கும் கருத்துகளைப் பெறுவதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவியது. எந்தெந்த கடைகள் திறமையாக செயல்படுகின்றன என்பதையும் அறிய உதவியாக இருந்தது.

அதே வழியில் நமது அன்றாட வாழ்வில் செழிப்பைக் கொண்டுவர பல்வேறு வழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கவேண்டும். இதே மாதிரி விவசாயிகள், மீனவா்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சாா்ந்தவா்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு முக்கியப் பங்காற்ற முடியும் என்பதையும் ஆராய வேண்டும் என்றாா் பியுஷ் கோயல்.

பாதுகாப்புத் துறை, சுகாதாரம், விவசாயம், ஸ்மாா்ட் சிட்டிகள், கல்வி ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு புதுயுகத் தொழில்முனைவாளா்கள் இந்த மூன்றாவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க வைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT