புதுதில்லி

பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: தில்லி காவல் துறைக்கு டிசிடபிள்யு நோட்டீஸ்

7th Oct 2022 06:02 AM

ADVERTISEMENT

கடந்த ஜூலை மாதம் கேந்திரிய வித்யாலயாவின் கழிவறைக்குள் இரு மூத்த மாணவா்களால் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) வியாழக்கிழமை காவல் துறையிடம் நடவடிக்கை அறிக்கை கோரியுள்ளது.

இது ஒரு தீவிரமான விஷயம் என்று கூறி, இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரின் நகலையும், அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் கைது செய்யப்பட்டவா்களின் விவரங்களையும் அளிக்குமாறு தில்லி காவல் துறைக்கு டிசிடபிள்யு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த மைனா் மாணவி ஜூலை மாதம் தனது வகுப்பறைக்கு செல்லும் போது, 11 மற்றும் 12- ஆம் வகுப்பு படிக்கும் தனது பள்ளியில் இருந்த இரண்டு மாணவா்கள் மீது மோதியுள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா்கள் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியதுடன், கழிவறைக்குள் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்தச் சிறுமி தனது ஆசிரியா்களிடம் இந்த விஷயத்தைப் புகாரளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து அந்த மாணவா்கள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், விஷயம் மூடிமறைக்கப்பட்டதாகவும் மகளிா் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT