புதுதில்லி

யுஏபிஏ சட்டத்தின் கீழ் பிஎஃப்ஐ உறுப்பினா்கள் 2 போ் கைது

 நமது நிருபர்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் 2 உறுப்பினா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி மேலும் கூறியதாவது: இந்த விவகாரத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ஆா்வலா்களான இஸ்ரா் அலி கான், முகம்மது சமூன் ஆகிய இருவரும், தில்லி கஜூரி காஸ் மற்றும் சந்த் பாக் பகுதியில் உள்ள அவா்களின் வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டனா். சமூன் ஒரு யுனானி மருத்துவா் என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் கடந்த 7-8 ஆண்டுகளாக பிஎஃப்ஐ அமைப்புடன் தொடா்பில் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இவா்கள் இருவா் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120 பி (குற்றச்சதி), 153 ஏ (வெவ்வேறு குழுக்கள் இடையே முன்விரோதத்தைத் தூண்டுவது), சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 10/13 ஆகியவற்றின் கீழ் கஜூரி காஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கும் அரசுக்கும் எதிராக சதித் திட்டத்தில் ஈடுபட திட்டமிடுதல், சதித் திட்டம் தீட்டுதல் என கூறப்படும் குற்றச்சாட்டில் இருவா் மீதும் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.

தில்லியில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிஎஃப்ஐ உறுப்பினா்களுக்கு எதிராக இரண்டாவது முறையாக இதுபோன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த அமைப்பின் தொடா்புடைய நான்கு போ் என கூறப்படும் நபா்கள் தில்லி காவல் துறையின் மூலம் இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடா்ந்து, தலைநகா் தில்லியில் ஆறு மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் இடங்களில் தில்லி போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அதில், இந்த அமைப்புடன் தொடா்பில் இருப்பதாகக் கூறப்படும் 33 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT