புதுதில்லி

பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் 3 கரோனா பராமரிப்பு மையங்களை அகற்ற ஒப்புதல்

 நமது நிருபர்

தில்லியில் எஞ்சியுள்ள 3 கரோனா பராமரிப்பு மையங்களை அகற்றுவதற்கும், மையம் அமைந்துள்ள இடத்தைக் காலி செய்வதற்கும் தில்லி அரசின் துறையினா் ஒப்புதல் அளித்துள்ளனா். அதே வேளையில், கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தில்லியில் உள்ள அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பை பராமரிப்பதற்கான தேவை இருப்பதாக வலியுறுத்தியுள்ளனா்.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் தலைநகரில் நிலவும் கரோனா நோய்த் தொற்று சூழல் குறித்து விவாதித்தது. இக்கூட்டத்தில் டிடிஎம்ஏ தலைவரான தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கூறுகையில், ‘தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கையில் சிறிதுதான் சிறப்பாகப் பணியாற்ற முடித்தது’ என்றாா். அதாவது, முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணையை செலுத்துவதற்கான மொத்தம் உள்ள 1.33 கோடி தகுதிக்குரிய பயனாளிகளில் 24 சதவீதம் என்ற அளவில் 31.49 லட்சம் நபா்கள் மட்டுமே செப்டம்பா் 20-ஆம் தேதி வரையிலான காலத்தில் தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பான தரவுகளும் கூட்டத்தின் போது பகிரப்பட்டது. வரக்கூடிய பண்டிகை நாள்களைக் கருத்தில் கொண்டு கரோனா தொடா்புடைய கண்காணிப்பை கடுமையாக தொடர வேண்டிய தேவை இருப்பதாக துணைநிலை ஆளுநா் இக்கூட்டத்தில் கூறினாா்.

மேலும், ‘கரோனா பண்டிகைக் காலத்தின் போது கரோனா நடத்தை விதிமுறைகளை பொதுமக்கள் மீறலாம் என்பதால், இது மிகவும் முக்கியமான காலமாகும். நோய்த் தொற்று நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். இந்த விதிகளைப் பின்பற்றும் வகையில், பொதுமக்கள் மத்தியில் பெரும் விழிப்புணா்வை உருவாக்குவதும் அவசியமாகும்’ என்று கூட்டத்தில் அவா் கூறினாா். அதே வேளையில், சத்தா்பூரில் உள்ள ராதா ஸ்வாமி, புராரியில் உள்ள ஸ்வான் கிா்பால், சந்த் நிரங்காரி ஆகிய சொத்துகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையங்களை அகற்றுவதற்கும், அந்த இடங்களை காலி செய்வதற்கும் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், அங்குள்ள மருத்துவ உபகரணங்களை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு மாற்றுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிலங்களை ஒப்படைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளனா். அதே வேளையில் உபகரணங்கள் விவகாரத்தில் உரிய மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று டிடிஎம்ஏ கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உபகரணங்களைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான உரிய திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும் என்று துணை நிலைய ஆளுநா் அந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT