புதுதில்லி

பணம் திருடப்பட்டதாக பொய் சொன்ன டெலிவரி இளைஞா் கைது

6th Oct 2022 01:24 AM

ADVERTISEMENT

தெற்கு தில்லியின் நெப் சராய் பகுதியில் பணம் திருடப்பட்டதாக பொய் சொன்ன 24 வயது ‘டெலிவரி’ இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சந்தன் சவுத்ரி புதன்கிழமை கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் சத்தா்பூரைச் சோ்ந்த மோஹித் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸாரை தொடா்பு கொண்டு பணம் கொள்ளை போனதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று புகாா்தாரரைச் சந்தித்து விசாரித்தனா். அப்போது, தான் வனத்துக்குச் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த போது, இரண்டு மோட்டாா்சைக்கிள்களில் வந்த நான்கு போ் தன்னை துப்பாக்கி முனையில் பிடித்து ரூ.31,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்ாகத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வுக்குள்படுத்தினா். அதில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் போது, புகாா்தாரா் மட்டுமே அந்த இடத்தில் இருந்தது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதைத் தொடா்ந்து, அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, திருட்டுப்போகவில்லை என்பதை மோஹித் ஒப்புக்கொண்டாா்.

முன்னதாக, அவா் நெப் சராய்யில் ஒரு நபருக்கு தொலைபேசியை டெலிவரி செய்துள்ளாா். அப்போது, அந்த நபா் ரொக்கமாக ரூ.30,030 பணம் கொடுத்துள்ளாா். பணத்தைப் பாா்த்ததும் ஆசைப்பட்ட அவா், பொய்யான தகவலைக் கொடுத்து பணத்தை அபகரிக்கத் திட்டமிட்டது தெரிய வந்தது. தீவிர விசாரணைக்குப் பிறகு, அவரது வீட்டில் இருந்து பணம் மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT