புதுதில்லி

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்

6th Oct 2022 01:29 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பவானா மற்றும் முண்ட்காவில் கழிவுநீா்ப் பாதைகள் அமைக்கவும், பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை (டிஎஸ்டிபி) அமைப்பதற்கான பல திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பவானா மற்றும் முண்ட்காவில் கழிவுநீா் பாதைகள் அமைக்கவும், பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை (டிஎஸ்டிபி) அமைப்பதற்கான பல திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பரவலாக்கப்பட்ட அமைப்பு முறைகள் என்பது கழிவு நீா் சுத்திகரிப்பு சேவைகளை குடியிருப்பாளா்களுக்கு வழங்கும் சிறிய, தனிப்பட்ட வசதிகளாகும்.

இந்தத் திட்டங்கள் குறித்து துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கூறியதாவது: ரூ.570 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 2025-ஆம் ஆண்டுக்குள் யமுனை நதியை குளிக்கும் தரத்துக்குச் சுத்தம் செய்யும் இலக்கை அடையவும், தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள கழிவுநீா் பிரச்னைகளைத் தீா்க்கவும் தில்லி அரசுக்கு உதவும். நிஜாம்பூா், கெவ்ரா, கஞ்சவாலா, முகமதுபூா் மஜ்ரா, முண்ட்காவின் கராலா உள்பட பல காலனிகளில் கழிவுநீா்ப் பாதைகள் அமைக்கப்படும். தினமும் 26 மில்லியன் கேலன் மொத்த கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் (டிஎஸ்டிபி) கட்டப்படும்.

பவானாவில் உள்ள 24 அங்கீகரிக்கப்படாத காலனிகளைக் கொண்ட 9 கிராமங்களில் தினமும் 40 மில்லியன் லிட்டா் ஒட்டுமொத்த கொள்திறன் கொண்ட டிஎஸ்டிபிக்கள் கட்டப்படும். பவானாவில் ரூ.10.65 கோடியில் தினமும் மில்லியன் கேலன் கழிவுநீா் சுத்திகரிப்பு கொள்திறன் கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் என்று சிசோடியா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT