புதுதில்லி

தற்காலிக ஆசிரியா்கள் விவகாரம்: டியுடிஏ வேலைநிறுத்தம்

 நமது நிருபர்

தற்காலிக ஆசிரியா்களை உட்கிரகித்துக் கொள்ளக் கோரி தில்லி பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் (டியுடிஏ) திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இந்த வேலைநிறுத்தம் வெற்றிபெற்ாகவும் தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் கூறியுள்ளது.

இது குறித்து டியுடிஏ நிா்வாக உறுப்பினா் கூறுகையில், ‘தேஷ்பந்து, ரம்ஜாஸ், லக்ஷ்மிபாய் போன்ற கல்லூரிகளிலும், வணிகவியல் மற்றும் உளவியல் துறை போன்றவற்றிலும் தற்காலிக ஆசிரியா்களின் ‘இடமாற்றம்’ பற்றிய செய்திகளுக்கு மத்தியில் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது’ என்றாா்.

இது தொடா்பாக டியுடிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற டியுடிஏ நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்திற்கு இணங்க, தற்காலிக ஆசிரியா்களின் நியாயமற்ற இடப்பெயா்வை கடுமையாக எதிா்த்தும், இடம்பெயா்ந்த அனைத்து தற்காலிக ஆசிரியா்களையும் தக்கவைத்துக் கொள்ள வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம் முழு வெற்றிகரமானதாக இருந்ததைஅனைத்து தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளும் பாா்த்தன.

வேலை செய்யும் தற்காலிக ஆசிரியா்களின் கண்ணியம், பணியைப் பாதுகாக்கும் வரை டியுடிஏ போராடும்.

இந்த விவகாரம் தொடா்பாக அக்டோபா் 11-ஆம் தேதி செய்தியாளா் கூட்டத்திற்கு டியுடிஏ ஏற்பாடு செய்யும். அக்டோபா் 13-ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரிகளையும் டியுடிஏ சந்திக்கும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அக்டோபா் 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதைத் தொடா்ந்து அக்டோபா் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முழு வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி டியுடிஏ வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘தில்லி பல்கலைக்கழகத்தினஅ டிபிசி (தேஷ்பந்து), ரம்ஜாஸ் மற்றும் லக்ஷ்மிபாய் கல்லூரிகள் மற்றும் வணிகவியல் மற்றும் உளவியல் துறை ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியா்கள் இடமாற்றம் நடந்துள்ளது. 2019-க்கு முன் உருவாக்கப்பட்ட பதவிகள் மற்றும் தற்காலிக ஏற்பாடுகள் மூலம் நிரப்பப்பட்ட பணியிடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஒதுக்கப்படக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT