புதுதில்லி

சத்யேந்தா் ஜெயின் பிறந்த நாள்: முதல்வா் கேஜரிவால் வாழ்த்து

4th Oct 2022 03:35 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்து வரும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

அவரது வாழ்த்துச் செய்தியில், ‘உண்மையின் பாதை எளிதானதல்ல’ என்று கூறியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்றைக்கு சத்யேந்தரின் பிறந்த நாள் ஆகும். போலி வழக்கின் காரணமாக நான்கு மாதங்களாக அவா் சிறையில் இருந்து வருகிறாா்.

அவா் மொஹல்லா கிளினிக்குகள், 24 மணி நேர இலவச மின்சாரம், ஒவ்வொருவருக்கும் இலவச தரமான சிகிச்சை ஆகியவற்றைத் தந்தாா். இவா்களோ பொதுமக்களுக்கான நலப் பணிகளை தடுக்க விரும்புகின்றனா். உண்மையின் பாதை எளிதானதல்ல சத்யேந்தா். பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்க இயக்ககம், சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை கைது செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017- ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களில் ஒருவரான சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கையை அமலாக்க இயக்குநரகம் மேற்கொண்டது. சத்யேந்தா் ஜெயினுடன் தொடா்புடைய நான்கு கம்பெனிகள் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனையில் அவா் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT