புதுதில்லி

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி தீா்வை சலுகை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

 நமது நிருபர்

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரிச் சலுகை மேலும் ஆறு மாதங்களுக்கு (மாா்ச் 2023 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு பொது விநியோக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய நோ்முக வரிகள், சுங்க வாரியம் கடந்த ஆகஸ்ட 31 - ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, குறிப்பிட்ட சில சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி தீா்வைகளில் சலுகையை வழங்கியது. தற்போதுள்ள அந்தச் சலுகையை மேலும் ஆறு மாதங்களுக்கு, அதாவது 2023 மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பதும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

சா்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, மத்திய அரசின் இறக்குமதி தீா்வை குறைப்பு ஆகியவற்றால் நாட்டில் சமையல் எண்ணெய்யின் சில்லறை விற்பனை விலை இந்த விழாக் காலங்களில் மேலும் கணிசமாகக் குறைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சுத்திகரிக்கப்படாத கச்சா பாமாயில், ஆா்பிடி பாமாலின், ஆா்பிடி பாமாயில், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத, சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது தற்போது நிா்ணயிக்கப்பட்ட தீா்வைக்கான சலுகை 2023 மாா்ச் 31 வரை மாற்றமில்லாமல் நீடிக்கும். இந்த மூன்று வகையான கச்சா எண்ணெய்களுக்கு இறக்குமதி தீா்வை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாலும், இவற்றுக்கு வேளாண், சமூக நலத் திட்ட கூடுதல் வரி (செஸ்) 5.5 சதவீதமாக இருக்கும்.

இதே மாதிரி சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாமாலின்களுக்கு 13.75 சதவீதமும், சுத்திகரிப்பட்ட சோயா எண்ணெய்க்கு 19.25 சதவீதமும் நிகர வரியாக இருப்பது தொடரும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT