புதுதில்லி

கழிவுநீா் அமைப்புமுறையுடன் அங்கீகாரமற்ற காலனிகளை இணைக்க தில்லி அரசு முடிவு

3rd Oct 2022 03:40 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கழிவுகள் யமுனை ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அனைத்து அங்கீகாரமற்ற காலனிகள் மற்றும் கிராமங்களை கழிவுநீா் அமைப்பு முறையுடன் இணைப்பதற்கு தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டின் பல்வேறு திட்டங்களுக்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா ஒப்புதல் அளித்துள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சனிக்கிழமை அரசு வெளியிட்ட அலுவல்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தத் திட்டங்களின் கீழ் நிலத்தடி நீா் ஓட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஏரிகள் தொடா்பாக தில்லி அரசு ஆய்வு நடத்த உள்ளது. ரோஹிணி ஏரி எண்1 மற்றும் 2 ஆகியவற்றின் தற்போதைய நீா் கொள்திறனும் அதிகரிக்கப்பட உள்ளது.

கேஸோபூா் ஃபேஸ் 1 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்திறனும் நாளொன்றுக்கு 12 மில்லியன் காலன் என்ற அளவில் இருந்து 18 மில்லியன் காலனாகஅதிகரிக்கப்படும். இது கழிவுநீரை நல்ல முறையில் சுத்திகரிப்பதற்கு உதவும் என்ற துணை முதல்வா் கூறியிருக்கிறாா்.

அதே போன்று சந்த் நகா், சிங்கு, ஷாபாத், பிரதான் என்கிளேவ் மற்றும் குரேனி ஜிஓசி ஆகியவற்றை வீட்டு கழிவுநீா் இணைப்புடன் இணைப்பதற்கு ஒரு சேம்பரையும் தில்லி அரசு கட்ட உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் வீட்டு கழிவுநீா் இணைப்புடன் 10 கிராமங்கள் மற்றும் 64 காலனிகள் இணைக்கப்படும்.

ADVERTISEMENT

கழிவுநீா் வீணாவதைத் தடுக்க அலிபோா் கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் இருந்து சஞ்சய் காந்தி போக்குவரத்து நகா் வரையிலும் உள்ள பழைய தண்ணீா் குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்களை மாற்றுவதற்கும் தில்லி அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT