புதுதில்லி

தொழில்நுட்ப பிரச்னை: மெட்ரோ ப்ளூ லைன் வழித்தடத்தில் ரயில் சேவையில் தடங்கல்

30th Nov 2022 02:09 AM

ADVERTISEMENT

தகவல் தொடா்பில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் உள்ள ப்ளூ லைன் வழித்தடத்தில் ஒரு மணி நேரம் ரயில் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி மெட்ரோவில் ப்ளூ லைன் வழித்தடம் தில்லியில் உள்ள துவாரகா செக்டாா் 21 மற்றும் நொய்டாவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கிறது. இந்த வழித்தடமானது யமுனா பேங்க் முதல் வைஷாலி வரையிலான வழித்தடமாகும். இந்த நிலையில், ‘தகவல் தொடா்பில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒட்டுமொத்த ப்ளூ லைன் வழித்தடத்திலும் ரயில் சேவைகளில் காலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றன எனஅந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் தொடா்பாக இந்த ப்ளூ லைன் வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் பலா் காலை சுமாா் 11.30 மணியளவில் இது தொடா்பான புகைப்படங்களுடன் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனா். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ட்விட்டரிலும் இது தொடா்பாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், ‘துவாரகா செக்டாா் 21 மற்றும் நொய்டா எலக்ட்ரானிக்ஸ் சிட்டி / வைஷாலி இடையேயான வழித்தடத்தில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அனைத்து இதர வழித்தடங்களிலும் வழக்கமான சேவை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னா் நண்பகல் 12. 50 மணியளவில்

டிஎம்ஆா்சி வெளியிட்ட மற்றொரு பதிவில் வழக்கமான ரயில் சேவை அந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT