புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.6 டிகிரி: காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை7.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது. காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை வேளையில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி குறைந்து 7.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்து 27.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 38 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை 9.8 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஷ்பூரில் 8.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. மேலும், நஜஃப்கரில் 12.3 டிகிரி, ஆயாநகரில் 8.4 டிகிரி, தில்லி பல்கலை. வளாகத்தில் 14.1 டிகிரி, லோதி ரோடில் 7.4 டிகிரி, பாலத்தில் 11.1 டிகிரி, ரிட்ஜில் 8.9 டிகிரி, பீதம்புராவில் 13.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் திங்கள்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. அதாவது, காலை 10 மணியளவில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 324 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.

அதே சமயம், லோதி ரோடு (264), தில்ஷாத் காா்டன் (292), நொய்டா செக்டாா்-1 (290), நொய்டா செக்டாா் 125 (286), பூசா (255) ஆகிய வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. இருப்பினும், நேரு நகா் (406), ஆனந்த் விஹாா் (404) ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (நவம்பா் 29) காலை வேளையில் வானம் பனிப்புகை மூட்டமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT