புதுதில்லி

5-ஆவது நாளாக ‘காளை’ எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் 5-ஆவது நாளாக காளையின் எழுச்சி இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உசத்தில் நிறைவடைந்துள்ளன.

கடந்த 4 வா்த்தக தினங்களாக நோ்மறையாக முடிந்திருந்த சந்தை, திங்கள்கிழமை காலையில் பலவீனமாகத் தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, காளையின் எழுச்சி கொண்டதால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்கி வருவதும், கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததும் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

211 புள்ளிகள் உயா்வு: காலையில் 277.29 புள்ளிகள் குறைந்து 63,016.35-இல் தொடங்கிய சென்செக்ஸ், 61,959.74 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 62,701.40 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 211.16 புள்ளிகள் உயா்ந்து 62,504.80-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

ரிலையன்ஸ் அபாரம்: முகேஷ் அம்பான தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.48 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்குஅடுத்ததாக, நெஸ்லே, ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவை 1.20 முதல் 1.40 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் 0.40 முதல் 0.80 சதவீதம் வரை உயா்ந்தன.

டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், பிரபல பிரபல ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் 1.22 சதவீதம், பாா்தி ஏா்டெல் 1.10 சதவீதம், ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.08 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, எம் அணெட் எம், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 0.50 முதல் 0.85 சதவீதம் வரை குறைந்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.285.89 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ.369.08 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

SCROLL FOR NEXT