புதுதில்லி

தில்லி மாநகராட்சித் தோ்தல் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

28th Nov 2022 12:57 AM

ADVERTISEMENT

வருகின்ற டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சித் தோ்தலுக்கு முன்னதாக, வாக்குச் சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இரண்டாம் நிலை சீரமைப்பு நடவடிக்கைகள், தில்லி மாநிலத் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுப்பாா்வையாளா்கள் முன்னிலையில் அந்தந்த மாவட்டத் தோ்தல் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளா்களும் செயல்பாட்டின் போது உடனிருந்தனா் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் நிலை ரேண்டமைசேஷன் முன்பு ஆணையத்தால் செய்யப்பட்டது. அங்கு வாா்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

250 வாா்டுகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT