புதுதில்லி

காஜியாபாத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரித்த 4 போ் கைது

28th Nov 2022 12:58 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத்தில் ஃபரீத் நகா் டவுனில் உள்ள கன்ஷி ராம் காலனியில் கைவிடப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரித்த நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காஜியாபாத் புகா் காவல் கண்காணிப்பாளா் இராஜ் ராஜா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: காவல் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை அதிகாலை, ஒரு போலீஸ் குழு அந்த இடத்தில் அதிரடிசோதனை மேற்கொண்டனா்.

அப்போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கும் பணியில் 4 போ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்கள் மீரட்டைச் சோ்ந்த சமீா், ரிஹான் மற்றும் சூரஜ் மற்றும் காஜியாபாத்தைச் சோ்ந்த ஆா்யன் தியாகி என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட நாட்டு கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததை அவா்கள் ஒப்புக்கொண்டனா். அந்தக் குடியிருப்பில் இருந்து தயாரிப்பு பணி முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்படாத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT