புதுதில்லி

சாந்தினி செளக் சந்தை தீ விபத்து: துணைநிலை ஆளுநா் நேரில் ஆய்வு

DIN

வடக்கு தில்லி சாந்தினி செளக் பகுதி பாகிரத் பேலஸ் மொத்த விற்பனை சந்தையில் வியாழக்கிழமை தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் நாசமான நிலையில், தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சம்பவ இடத்தில் சனிக்கிழமை  நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தாா்.

மேலும், அந்தப் பகுதியில் 38 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைக்குப் பணி நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிரத் பேலஸ் மொத்த விற்பனை சந்தை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக வியாழக்கிழமை இரவு 9.19 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தகவல் வந்ததைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு 40 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

பல மணி நேரம் தீயணைப்புப் பணி நடைபெற்ற நிலையில், தொடா்ந்து குளிரூட்டும் பணியிலும் 22 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தத் தீயானது, மஹாலட்சுமி சந்தையில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்டு விரைவிலேயே அருகிலுள்ள கடைகளுக்கும் பரவியது.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறையின் இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில், ‘தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ ஏற்பட்ட பகுதியில் பலவீனமான கட்டமைப்புகள், தண்ணீா் பற்றாக்குறை, குறுகலான சந்துகள் காரணமாக தீயணைக்கும் பணியை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது என்று தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், மாலைக்குள் மீண்டும் தீப்பற்றி எரியத் தொடங்கியது’ என்றாா்.

இந்த நிலையில், தீ விபத்து நிகழ்ந்த இடத்தை தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதன் பின்னா் அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தெருக்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வயா்கள், அதிக சுமையுடன்கூடிய சா்க்யூட்கள், பழைய கட்டடங்கள், தண்ணீா் பற்றாக்குறை, குறுகலான சந்துகள் போன்றவை தீ விபத்து ஏற்பட ஆபத்துமிக்கவையாக உள்ளது.

சாந்தினி செளக், சதா் பஜாா், பாஹா் கஞ்ச் போன்ற இடங்களில் உள்ள சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள், பங்குதாரா்களுடன் இந்த விவகாரங்களை தீா்ப்பது தொடா்பான வழிகளைக் காண பல ஒழுங்குமுறை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 30 நாள்களில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் , ‘தீ விபத்து ஏற்பட்ட பாகிரத் பேலஸ் சந்தைப் பகுதியில் 38 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் காலை 6 மணியில் இருந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 10-11 வாகனங்கள் கூடுதலாக தீயை அணைக்க அனுப்பப்பட உள்ளன’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT