புதுதில்லி

‘போலி கலால் ஊழல் வழக்கில்சிசோடியாவை சிக்கவைக்க முயற்சி’

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு ‘போலி‘ என்றும் அதில் துணை மனீஷ் சிசோடியாவை சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினாா்.

தில்லி கலால் கொள்கை உருவாக்கம், செயலாக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இது குறித்து முதல்வா் கேஜரிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சிபிஐ குற்றப்பத்திரிகையில் மனீஷின் பெயா் இல்லை. இந்த முழு வழக்கும் போலியானது. இது தொடா்பான சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை. மொத்தம் 800 அதிகாரிகள் நான்கு மாதங்களாக நடத்திய விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதன் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிா்காலத்திற்கான நம்பிக்கையை மனீஷ் அளித்திருந்தாா். அதுபோன்ற ஒருவரை பொய் வழக்கில் சிக்கவைத்து அவப்பெயரை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டதற்காக நான் வருந்துகிறேன் என அதில் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT