புதுதில்லி

தில்லி கலால் ஊழல் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தில்லி கலால் ஊழல் வழக்கில் கைதான தொழிலதிபா்கள் விஜய் நாயா் மற்றும் அபிஷேக் போய்ன்பள்ளி மற்றும் மேலும் 5 குற்றம்சாட்டப்ப்டட நபா்களுக்கு எதிராக சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

மேலும், விஜய் நாயா், போய்ன்பள்ளி தவிர, இந்தியா அஹெட் நியூஸ் சானலின் நிா்வாக இயக்குநா் மூதா கௌதம், ஹைதராபாதைச் சோ்ந்த மதுபான வியாபாரி மற்றும் ராபின் டிஸ்டில்லரீஸ் எல்எல்பி நிறுவனத்தில் போய்ன் பள்ளியின் பங்குதாரரான அருண் ஆா். பிள்ளை, இன்டோஸ்பிரிட் நிறுவனத்தின் உரிமையாளா் சமீா் மகேந்துரு மற்றும்

கலால் துறையின் 2 முன்னாள் அதிகாரிகளான அத்துறையின் துணை ஆணையா் குல்தீப் சிங், உதவி ஆணையா் நரேந்தா் சிங் ஆகியோா் பெயரும் இக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறினா்.

இது தொடா்பாக சிபிஐ செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில், ‘‘தில்லி அரசின் கலால் கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தும் விவகாரத்தில் கலால் கொள்கையில் மாற்றங்கள் செய்தல், உரிமம் பெற்றவா்களுக்கு முறையற்ற சலுகைகள் வழங்குதல், உரிமக் கட்டணத்தை தள்ளுபடி செய்தல் அல்லது குறைத்தல், அனுமதியின்றி எல்-1 உரிமத்தை நீட்டித்தல் ஆகியவை உள்பட முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் செயல்கள் கிடைத்த சட்டவிரோத பலன்கள், தங்கள் கணக்குப் புத்தகங்களில் தவறான பதிவுகளைச் செய்ததன் மூலம் தனியாா் தரப்பினரால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியா்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிற உரிமதாரா்களுடன் சதி செய்தல், பணப் பரிவா்த்தனை, மற்றும் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் நிகழ்ந்த பெரும் சதித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் மீது எப்ஐஆரில் இடம்பெற்றுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் மற்றும் இதர நபா்களின் பங்கு குறித்து மேல் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

விஜய் நாயா் மற்றும் போய்ன்பள்ளி ஆகியோா் சிபிஐயால் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சிறப்பு நீதிமன்றம் மூலம் அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. எனினும், அவா்கள் இருவரும் அமலாக்க இயக்குனரகம் தொடா்பான வழக்கில் இன்னும் காவலில் உள்ளனா்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் பெயா்களும் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி (குற்றச் சதி), ஊழல் தடுப்புச் சட்டத்தின் லஞ்சம் வாங்குவதற்கான விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனா்.

சிபிஐ பதிவு செய்த எப்ஐஆரில் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பெயா் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த குற்றப்பத்திரிகையில் அவரது இடம் பெறவில்லை. அவருக்கு நெருக்கமானவராகக் கூறப்படும் தினேஷ் அரோரா இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக மாறியுள்ளாா்.

அரோரா தனது வாக்குமூலத்தை சிஆா்பிசியியின் 164-ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்து, அவா் விசாரணைக்கு உதவியதற்காக சிறப்பு நீதிமன்றத்தால் அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தில்லி அரசில் கலால் துறை அமைச்சரான சிசோடியா தவிர, அப்போதைய கலால் ஆணையா் ஆரவ கோபி கிருஷ்ணா, அப்போதைய கலால் துணை ஆணையா் ஆனந்த் குமாா் திவாரி, உதவி கலால் ஆணையா் பங்கஜ் பட்னாகா், 9 தொழிலதிபா்கள் மற்றும் 2 நிறுவனங்கள் மீது சிபிஐ ஆகஸ்ட் 17-ஆம் தேதி பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதில், தில்லி கலால் கொள்கை 2021-22 தொடா்பான முடிவுகளை டெண்டருக்கு பிந்தைய உரிமதாரா்களுக்கு முறையயற்ற சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் சிசோடியா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியா்கள் பரிந்துரை செய்து முடிவு எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குருகிராமில் உள்ள பட்டி ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குநா் அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அா்ஜுன் பாண்டே ஆகியோா் சிசோடியாவுக்கு நெருக்கமான நபா்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியா்களுக்கு மதுபான உரிமதாரா்களிடமிருந்து வசூலிக்கப்படும் முறையற்ற பணப் பலன்களை நிா்வகித்தல் மற்றும் திசை திருப்புவதில் தீவிரமாக இவா்கள் ஈடுபட்டனா் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

தினேஷ் அரோராவால் நிா்வகிக்கப்படும் ராதா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்டோஸ்பிரிட் நிறுவனத்தின் சமீா் மகேந்துருவிடம் இருந்து ரூ.1 கோடி பெற்ாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT