புதுதில்லி

தலைவா், பொதுச் செயலாளருக்கு ஸ்டாம்சைஸ் படம் தனியாக வரும் தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு புதிய நிா்வாகக் குழு தோ்வு

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சங்கத்தின் பொதுச் செயலா் என். கண்ணன் தெரிவித்திருப்பதாவது: தில்லி தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழுவைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்தலில் 604 சங்க உறுப்பினா்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் வெளியானது. இந்தத் தோ்தலில் சக்திபெருமாள் சங்கத்தின் தலைவராகவும், இரா. முகுந்தன் பொதுச் செயலாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பெ.ராகவன் நாயுடு துணைத்தலைவராகவும், டாக்டா் எம். சுந்தர்ராஜன், உமா சத்தியமூா்த்தி இணைச் செயலாளா்களாகவும், எஸ். அருணாச்சலம் பொருளாளராகவும், வி.என்.டி. மணவாளன் இணைப் பொருளாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்களாக டி.அமுதா, தி.பெரியசாமி, சி.கோவிந்தராஜன், பி. அமிா்தலிங்கம், ஜெ.சுந்தரேசன், என்.ராஜ்மோகன், பி.ரங்கநாதன், சி.தங்கவேல், வி. உஷா, மாலதி தமிழ்ச்செல்வன் ஆகியோரும், காத்திருப்பு உறுப்பினா்களாக ரேவதி ராஜன், எம்.ராஜா ஆகியோரும் சங்க உறுப்பினா்களால் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT