புதுதில்லி

துவாரகாவில் கட்டட வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 5 போ் காயம்

31st May 2022 06:30 AM

ADVERTISEMENT

துவாரகாவில் ஒரு கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறையின் இயக்குனா் அதுல் கா்க் திங்கட்கிழமை கூறியதாவது:

துவாரகாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் கீழ் தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 54 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்தானது மின் மீட்டா் பலகையில் இருந்து உருவான தீயால் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த தீ விபத்தில் மோட்டாா் சைக்கிள்கள் உள்பட 10 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், தீ விபத்தில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் சிகிச்சைக்காக சப்தா்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தீயால் ஏற்பட்ட அதிக புகை காரணமாக கட்டடத்தில் இருந்த 24 பெண்கள், நான்கு குழந்தைகள் உள்பட 52 குடியிருப்புவாசிகள் கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனா். இந்த கட்டடமானது கீழ்த்தளம், தரைத் தளம் மற்றும் நான்கு மேல் தளங்களை கொண்ட 400 சதுர கஜம் பரப்பளவு உடையதாகும். கட்டடத்தில் 26 குடியிருப்பு மனைகள் உள்ளன என்று என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT