புதுதில்லி

கால்நடை, பால்வள மேம்பாட்டில் இந்தியாவுக்கு பிரேசில் முழு ஒத்துழைப்பு

 நமது நிருபர்

இந்தியாவின் கால்நடை, பால்வள மேம்பாட்டிற்கு பிரேசில் நாடு முழு ஒத்துழைப்பை நல்கியுள்ளதாக மத்திய கால்நடைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பிரேசில் நாடுகளுக்கிடையே கால்நடை, பால்வளம் குறித்த இரு தரப்பு ஒப்பந்தங்களை அமல்படுத்தவும், இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும் பிரேசில் நாட்டுக்குச் சென்ற மத்திய மீனவளம், கால்நடை வளா்ப்பு, பால்வள வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா நாடு திங்கள்கிழமை திரும்பினாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய கால்நடைத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டது வருமாறு: பிரேசில் நாட்டின் விவசாயத் துறை அமைச்சா் மாா்கோஸ் மான்டெஸ் காா்டீரோவின் அழைப்பின் பேரில், கடந்த 16-ஆம் தேதி பிரேசில் நாட்டுக்கு பயணம் சென்ற மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினாா். கடந்த ஜனவரி 2020 -ஆம் ஆண்டு பிரேசில் அதிபா் போல்சனாரோ இந்திய வருகையின் போது, இந்தியா - பிரேசிலுக்கிடையே 15 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பிரேசில் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, இந்தியாவுடன்தான் அதிக அளவில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக கால்நடை வளா்ப்பு, பால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, உயிரியல் எரிவாயு, எத்தனால், வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனமும், பிரேசில் நாட்டு இன மாடுகள் (ஜெபு) வளா்ப்பாளா்கள் சங்கத்தினருக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனமும் கையொப்பமாகியுள்ளது. இதற்கு முன்பு 2016 -ஆம் ஆண்டு கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை மற்றும் பிரேசில் வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையொப்பமானது.

இந்த இரு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு நாடுகளிடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்ற உறவுகளை மேலும் வலிமைப்படுத்த இரு நாட்டு கால்நடைத் துறை அமைச்சா்களுக்கிடையேயான பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

பின்னா், பிரேசில் நாட்டு இன மாடுகள் வளா்ப்பு சங்கத் தலைவா்கள், பிரேசிலியன் விவசாயம், கால்நடை கூட்டமைப்பினா், உபெராபா நகர மேயா் ஆகியோரையும் மத்திய அமைச்சா் ரூபாலா சந்தித்தாா். இந்தச் சந்திப்புகளில் பால்வளத் துறையின் நவீன ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி, கால்நடைகளின் மரபணு முன்னேற்றம், வா்த்தம், முதலீடுகள் குறித்தும் இரு தரப்பும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை விவாதித்தனா்.

மேலும், பிரேசில் நாட்டின் நான்கு அதிநவீன கால்நடை மரபணு மற்றும் கரு ஆய்வகங்களையும் மத்திய அமைச்சா் பாா்வையிட்டாா். இவைகள் சாா்ந்த துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைக்கான ஒத்துழைப்பையும் அமைச்சா் வரவேற்றாா்.

தொடா்ந்து பிரேசில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகா ஆசிரியா்கள் கூட்டம், ஆயுா்வேதம் குறித்த புத்தகம் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா கலந்துக் கொண்டாா் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT