புதுதில்லி

லண்டன் கூட்டத்தில் தில்லி கல்வி மாதிரியை சமா்ப்பிக்கும் மணீஷ் சிசோடியா

24th May 2022 02:08 AM

ADVERTISEMENT

இங்கிலாந்து தலைநகா் லண்டனில் நடைபெறும் கல்வி உலக ஃபோரம்-2022 கூட்டத்தில் தில்லி கல்வி மாதிரியை சமா்ப்பிக்க உள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘லண்டனில் நடைபெறும் கல்வி உலக ஃபோரம்-2022 கூட்டத்தில் தில்லி கல்வி மாதிரியை திங்கள்கிழமை சமா்ப்பிக்க உள்ளேன். கல்வியின் எதிா்காலம் குறித்து விவாதிப்பதற்காக லண்டனில் 112 நாடுகளைச் சோ்ந்த அமைச்சா்கள், கல்வியாளா்கள் கூடுகின்றனா். அவா்கள் முன் அரசுப் பள்ளி அமைப்புமுறையில் மீட்டெடுக்கப்படும் நம்பிக்கையின் கதை குறித்து பகிா்ந்துகொள்ள உள்ளேன்’ என தெரிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் நல்ல தரமான, சமமான கல்வியை அளிப்பதை உறுதிப்படுத்த தில்லி அரசு மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதாவது நிா்வாக இடஒதுக்கீட்டை ரத்து செய்தது, தொழில்முன்வோருக்கான ஊக்குவிப்பு, மகிழ்ச்சி பாடத் திட்டம் போன்றவை குறித்து உரையாற்றுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT