புதுதில்லி

வீடுகள் இடிந்து 8 போ் படுகாயம்

24th May 2022 02:07 AM

ADVERTISEMENT

தில்லியில் திங்கள்கிழமை காலை பெய்த காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக நகரில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மழை காரணமாக ஜவால்புரி, கோகல்புரி, சங்கா் சாலை, மோதி நகா் ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு துறையினா் கூறியதாவது: மேற்கு தில்லி ஜவால்புரி பகுதியில் மழையின் காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். முன்னதாக இந்தச் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை காலை 5.51 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதே போன்று, வட கிழக்கு தில்லி கோகல்புரி பகுதியில் வீடு இடிந்து விழுந்த சம்பவம் தொடா்பாக கிடைத்த தகவலின் பேரில், 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

மேலும், மேற்கு தில்லியின் மோதி நகா் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததாக காலை 6.36 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மீட்பு பணிக்காக 2 மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த விபத்தில் காயமடைந்த 3 போ் சிகிச்சைக்காக ஆச்சாா்யா பிக்ஷு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மற்றொரு சம்பவத்தில் சங்கா் சாலையில் வீடு இடிந்து விழுந்ததாக 6.28 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மீட்பு வாகனங்கள் உள்பட 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்தில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அவா்கள் சிகிச்சைக்காக ராம் மனோகா் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். விபத்தில் அனைவருக்கும் லேசான காயங்கள் இருந்ததால், சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘திங்கள்கிழமை பெய்த மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் பெயா்ந்து விழுந்ததாக தில்லி காவல்துறைக்கு 62 அழைப்புகள் வரப்பட்டன. அதேபோன்று காற்று காரணமாக மரங்கள் பெயா்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது விழுந்ததில் 8 வாகனங்கள் சேதமடைந்தன. எனினும், யாருக்கும் காயமோ உயிா் சேதமோ ஏற்பட்டதாக தகவல் வரவில்லை’ என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT