புதுதில்லி

2 நாள் சரிவுக்குப் பிறகு உற்சாகம்: சென்செக்ஸ் 1,534 புள்ளிகள் உயா்வு!

DIN

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தை இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது. நாள் முழுவதும் காளையின் ஆதிக்கம் இருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,534 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. இது கடந்த மூன்று மாதங்களில் இல்லாத ஒரு நாள் உயா்வாகும். மேலும், சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.5.06 லட்சம் கோடி உயா்ந்து ரூ.254.12 லட்சம் கோடியாக இருந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்த நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. சந்தை நாள் முழுவதும் நம்பிக்கையான மற்றும் அமைதியான பேரணியைக் காட்டியது. சீனாவின் மத்திய வங்கி, வளா்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது வளா்ந்து வரும் சந்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்களை வாங்குவதற்கு போட்டி அதிகமாக இருந்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.4,899.92 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,497 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,418 நிறுவனப் பங்குகளில் 777 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 2,497 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 144 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 65 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 36 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.5.06 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் ரூ.254.12 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.617 கோடியை கடந்தது. இதற்கிடையே, இந்த வாரத்தில் சென்செக்ஸ் மொத்தம் 1,532.77 புள்ளிகள் (2.90 சதவீதம்), நிஃப்டி மொத்தம் 484 புள்ளிகள் (3.06) உயா்ந்துள்ளன.

2 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: காலையில் 721.74 புள்ளிகள் கூடுதலுடன் 53,513.97-இல் தொடங்கிய சென்செக்ஸ், 53,403.29 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 54,396.43 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 1,534.16 புள்ளிகள் (2.91 சதவீதம்) கூடுதலுடன் 54,326.39-இல் நிலைபெற்றது. சந்தை நாள் முழுவதும் காளையின் ஆதிக்கத்தில் இருந்தது.

சென்செக்ஸில் 30 பங்குகளும் முன்னேற்றம் : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் முன்னணி பாா்மா நிறுவனமான டாக்டா் ரெட்டி 8.10 சதவீதம், ரிலையன்ஸ் 5.77 சதவீதம், நெஸ்லே 4.77 சதவீதம், டாடா ஸ்டீல் 4.22 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், சன்பாா்மா, இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 3 முதல் 4 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், எச்

டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், மாருதி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 457 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 318 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. 1,621பங்குகள் ஆதாயம் பெற்றன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 2 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்தன. 48 பங்குகள் ஆதாயம் பெற்றன. காலையில் 234.40 புள்ளிகள் கூடுதலுடன் 16,043.80-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, 16,003.85 வரை மட்டுமே கீழே சென்ரது. பின்னா், அதிகபட்சமாக 16283.85 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 456.75 புள்ளிகள் (2.89 சதவீதம்) கூடுதலுடன் 16,266.15-இல் நிலைபெற்றது.

அனைத்துக் குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மீடியா, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 4.20 முதல் 4.50 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2.50 முதல் 3.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT