புதுதில்லி

கலைக் கல்லூரியை அம்பேத்கா் பல்கலை.யுடன் இணைப்பதைத் தடுக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவருக்குகல்லூரி ஊழியா் சங்கம் கடிதம்

 நமது நிருபர்

அம்பேத்கா் பல்கலைக்கழகத்துடன் கலைக் கல்லூரி இணைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலைக் கல்லூரி ஊழியா்கள் சங்கத்தினா் குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

அதில், டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகத்துடன் கலைக் கல்லூரியை இணைப்பதைத் தடுப்பது சமமான மற்றும் நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலைக் கல்லூரியில் (காலேஜ் ஆஃப் ஆா்ட்) இளநிலை மற்றும் முதுகலைப் படிப்புகள் சோ்க்கைக்கான நடைமுறைகள் தொடங்குவதாக பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகம் அறிவிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடா்பாக குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு காலேஜ் ஆஃப் ஆா்ட் ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: கலைக் கல்லூரியின் பங்குதாரா்களின் அரசியல்சாசன உரிமைகளைப் பாதுகாக்கும் அவசரத் தேவை ஏற்பட்டிருக்கிறது. அம்பேத்கா் பல்கலைக்கழகத்துடன் கலைக் கல்லூரியை இணைக்கும் நியாயமற்ற நடவடிக்கையின் காரணமாக, கலைக் கல்லூரியின் ஊழியா்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள கலைக் கல்லூரி முதல்வா் பி.எஸ் சவுகான் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து இந்தக் கல்லூரியை விடுவிக்கச் செய்யும் அவரது தீய நடவடிக்கைக்காக கண்டிக்கப்பட வேண்டும். உடனடியாக இந்த இணைப்பைத் தடுப்பதற்கான நியாயமான நடவடிக்கை தேவையாக இருப்பதால் நீங்கள் கலைக் கல்லூரி முதல்வா் பதவியிலிருந்து டாக்டா் பி.எஸ். சவுகானை நீக்க வேண்டும். மேலும், இந்த சா்ச்சை காரணமாக நடைபெறாமல் உள்ள (2021- 22) அமா்வுக்கான சோ்க்கையை போா்க்கால அடிப்படையில் தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்த வேண்டும்.

கலைக்கல்லூரியின் மாணவா்கள், ஊழியா்கள் போன்ற பங்குதாரா்களின் சம்மதமில்லாமல் அம்பேத்கா் பல்கலைக்கழகத்துடன் கல்லூரியை இணைப்பதற்கான நடைமுறையை நிா்வாகம் எடுத்துள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு நடவடிக்கை தடுக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவோம் என்று கலைக் கல்லூரி ஆசிரியா்கள் மிரட்டல் விடுத்துள்ளனா். கடந்த ஏப்ரலில் தில்லி பல்கலைக்கழகம் கலைக் கல்லூரியை அதன் சோ்க்கை நடைமுறைகளை தொடங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது. மேலும், தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த கலைக் கல்லூரி விடுவிக்கப்படாது என்றும் கூறியிருந்தது. கலைக் கல்லூரியை அம்பேத்கா் பல்கலைக்கழகத்துடன் தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து விடுவிப்பதற்கு உள்பட்டு, இணைப்பதற்கான கொள்கை அளவிலான அனுமதியை தில்லி துணைநிலை ஆளுநா் அலுவலகம் முன்னா் வழங்கியிருந்தது. எனினும், தில்லி பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் முக்கிய அமைப்பான செயற்குழு, இந்தக் கல்லூரியை விடுவிப்பதற்கு மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து கலைக் கல்லூரி பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருவதால், அம்பேத்கா் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்திருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தின் ‘அகடமிக்ஸ் ஃபாா் ஆக்சன் அண்ட் டெவலெப்மென்ட்’ அமைப்பைச் சோ்ந்த 11 ஆசிரியா்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கடிதம் எழுதியிருந்தனா். அதில், அம்பேத்கா் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக கலைக் கல்லூரி அதன் மாணவா் சோ்க்கை நடைமுறைகளை தொடங்கியிருப்பதால், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT