புதுதில்லி

பவானாவில் செல்லோ டேப் தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

புது தில்லி: தில்லியின் பவானா தொழில்பேட்டை பகுதியில் உள்ள செல்லோ டேப் தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு துறையினா் தெரிவித்தனா். எனினும், இந்தச் சம்பவத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அவா்கள் கூறினா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் தெரிவித்ததாவது: பவானாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 11.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 17 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையிடம் தில்லி தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) இல்லை. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

இது குறித்து துணை காவல் ஆணையா் (புகா் வடக்கு) பிரிஜேந்திர குமாா் யாதவ் கூறியதாவது: தொழிற்சாலையின் மூன்றாவது தளத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. செல்லோ டேப்கள் தயாரிக்கப்படும் இந்த் தொழிற்சாலையில் தின்னா் பயன்படுத்தப்பட்டுள்ளது. பற்றிய தீயானது தீயணைப்புத் துறையின் உதவியுடன், மதியம் 2.30 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொழிற்சாலையின் உரிமையாளா் சந்தோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் பீதம்புராவில் உள்ள மஹாராணா பிரதாப் என்கிளேவ் பகுதியில் வசித்து வருகிறாா். அவருக்கு எதிராக சட்டப் பிரிவு 285 (தீ அல்லது எரிப்பு விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொள்ளுதல்), பிரிவு 336 (மற்றவா்களின் உயிருக்கோ அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கோ ஆபத்தை விளைவிக்கும் சட்டம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தில்லியின் முன்ட்காவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 27 போ் இறந்தனா். 16 போ் காயமடைந்தனா். அதைத் தொடா்ந்து, அடுத்தடுத்து தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT