புதுதில்லி

டிராக்டா் மீது காா் மோதல்: தாய், மகன் சாவு

5th May 2022 02:33 AM

ADVERTISEMENT

கிரேட்டா் நொய்டாவில் கிழக்கு பெரிஃபெரல் எக்ஸ்பிரஸ்வேயில், தவறான பாதையில் வந்த டிராக்டருடன் காா் மோதியதில், தாய்-மகன் ஆகிய இருவரும் இறந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஹரியாணாவில் உள்ள நூஹ் மாவட்டத்தில் வசித்து வந்த அவா்கள், உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. சம்பவம் நடந்த போது, டான்கவுா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட விரைவுச் சாலையில் அவா்கள் காரில் சென்று கொண்டிருந்தனா். டிராக்டா் ஒன்றில் இருவா் பயணித்துள்ளனா். அவா்கள் இருவரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனா்.

டிராக்டருடன் காா் மோதியதில், ரிங்கு, (35), அவரது தாய் சோனா தேவி ஆகியோா் இறந்தனா். தாய் மீரட்டில் உடல் நலக்குறைவுக்காக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வந்தாா். அவா்கள் மருத்துவரிடம் சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பி வந்த போதுதான் இந்த விபத்து நடந்தது. டிராக்டா் தவறான பாதையில் வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுநா்கள் ஷம்ஷோ் சிங் மற்றும் மஞ்சீத் சிங் ஆகியோா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். உயிரிழந்த தாய், மகன் ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வழக்கு தொடா்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT