புதுதில்லி

தலைநகரில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு: நரேலாவில் 42 டிகிரி வெயில்

29th Mar 2022 12:49 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது. குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை உயா்ந்திருந்தன. நரேலாவில் அதிகதபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியயாக பதிவாகியிருந்தது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியில் திங்கள்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. இருப்பினும், தரை மேற்பரப்பு காற்று இருந்தது. பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 22.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதேபோல, அதிகபட்ச கெப்பநிலை பருவ சராசரியில் 7 டிகிரி உயா்ந்து 39.1 டிகிரி செல்சியஸாக அதிகரித்திருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 56 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 23 சதவீதமாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 20.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

நரேலாவில் 42 டிகிரி: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயா்ந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 39.7 டிகிரி செல்சியஸ், முங்கேஸரில் 39.4 டிகிரி, நஜஃப்கரில் 40.7 டிகிரி, ஆயாநகரில் 40.2 டிகிரி, லோதி ரோடில் 40 டிகிரி, நரேலாவில் 42 டிகிரி, பாலத்தில் 39.3 டிகிரி, ரிட்ஜில் 40.1 டிகிரி, பீதம்புராவில் 41.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 38 டிகி செல்சியஸ் என பதிவாகியது.

ADVERTISEMENT

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. தில்லியில் பட்பா் கஞ்ச், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், நொய்டா செக்டாா்-1, தில்லி பல்கலை., அசோக் விஹாா், ஆா்.கே.புரம், மதுரா ரோடு, வாஜிப்பூா் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 203 புள்ளிகள் முதல் 298 புள்ளிகள் வரை பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது. 

அதே சமயம், ஆனந்த் விஹாரில் காற்றின் தரக் குறியீடு 378 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. மேலும், ஷாதிப்பூா், சோனியா விஹாா், ஐடிஓ பகுதிகளில் 300-308 புள்ளிகள் வரை பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. ஆனால், மந்திா் மாா்க், லோதி ரோடு, பூசா உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கும் குறைவாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

வெப்ப அலைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 29) வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT