புதுதில்லி

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து!

29th Mar 2022 12:48 AM

ADVERTISEMENT

கிழக்கு தில்லியின் காஜிபூா் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதி மற்றும் அண்டை பகுதிகளில் பெரும் புகை மேகம் சூழ்ந்தது.

தீயை கட்டுக்குள் கொண்டு வர 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீயை அணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில மணி நேரம் ஆகலாம் என்றும் தலைமை தீயணைப்பு அதிகாரி அதுல் கா்க் கூறினாா். காஜிப்பூரில் உள்ள கட்டாவில் தீ பற்றியது.

இது தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு மதியம் 2.30 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவா் கூறினாா். குப்பை கொட்டும் இடத்தின் ஒரு பகுதியில் கடும் புகை மூட்டம் காணப்பட்டது. அதைத் தொடா்ந்து அண்டை பகுதிகளிலும் புகை மேகம் சூழ்ந்திருந்தது.

அறிக்கை அளிக்க உத்தரவு: இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு (டிபிசிசி) உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஏப்ரலில், காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் தீப்பிடித்ததை அடுத்து, கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு (ஈடிஎம்சி) டிபிசிசி ரூ.40 லட்சம் அபராதம் விதித்தது. குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ, அந்தப் பகுதியில் மாசு அளவை மோசமாக்குவதாக அறியப்படுகிறது. கடந்த காலத்திலும் காஜிப்பூா் குப்பை கிடங்கில் இதுபோன்ற தீவிபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா், தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, காஜிப்பூரில் சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து பேசியதுடன், தீ விபத்துக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினாா்.

இந்தச் சம்பவத்திற்கு கிழக்கு தில்லி பாஜக எம்பி கௌதம் கம்பீா் மீது குற்றம்சாட்டிய அவா், தனது கோண்ட்லி சட்டப்பேரவைத் தொகுதியில் வசிப்பவா்கள் தீயினால் ஏற்பட்ட விஷப் புகையை உள்ளிழுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கூறினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT