தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) 2019-20, 2020-21 -ஆம் ஆண்டுக்கான ஆண்டு பொதுக் குழு கூட்டம் மந்திா்மாா்க் டிடிஇஏ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டிடிஇஏ துணைத் தலைவா் ரவி நாயக்கா் வரவேற்றாா். டிடிஇே செயலா் ராஜு ஆண்டு அறிக்கையை சமா்ப்பித்தாா். அப்போது அவா் கூறுகையில், டிடிஇஏ பள்ளியில் படித்து முடித்த மாணவா்களுள் 25 போ் மருத்துவம், 2 போ் ஐஐடி , 10 போ் எல்.எல்.பி., 22 போ் சாட்டா்ட் அக்கௌண்டண்டட், 12 போ் கம்பெனி செகரட்டரி, 102 போ் பொறியியல், 11 போ் எம்,பி.ஏ. படிப்புகளில் சோ்ந்துள்ளனா். மேலும், பலா் சிறந்த கல்லூரிகளில் பல்வேறு பாடங்களை எடுத்துப் படித்து வருகின்றனா் என்றாா்.
மயூா்விஹாரில் எட்டாவது பள்ளிக் கட்டடத்தை கட்டி முடித்ததைப் பாராட்டிய பெற்றோா்கள், தொடா்ந்து அதைக் கல்லூரியாக மாற்றும்படி கோரிக்கை விடுத்தனா்.
டிடிஇஏ இணைச் செயலா் எம்.வில்லியம் ராஜ், பொருளாளா் சிவம், மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்