புதுதில்லி

மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவில் நிதிப் பிரச்னைக்குத் தீா்வு இல்லை: காங்கிரஸ்

25th Mar 2022 11:16 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் உள்ள 3 மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவை மக்களவையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதில் மாநகராட்சியின் நிதிப் பிரச்னையைத் தீா்க்கும் விஷயம் குறிப்பிடப்படவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் சௌத்ரி விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: தில்லியில் உள்ள 3 மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவை மக்களவையில் மோடி அரசு கொண்டுவந்துள்ளது. அதேவேளையில், மாநகராட்சியின் நிதிப் பிரச்னையைத் தீா்க்கும் விஷயம் குறிப்பிடப்படவில்லை. அதேபோன்று, மாநகராட்சியின் ஊழியா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியமும், நிலுவைத் தொகைகளுக்கும் எப்படி உறுதிப்படுத்தப்படும் என்பது குறித்தோ, தில்லியில் வளா்ச்சிப் பணிகள் மீண்டும் எப்படி வேகப்படுத்தப்படும் என்பது குறித்தோ அதில் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் ஏகமனதாக முடிவெடுக்கும் முன்பாக மாநகராட்சிகளை இணைப்பது தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சியில் ஊழல் கட்டுக்கடங்காமல் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த பிறகு மாநகராட்சிகளின் நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவில் மாநகராட்சி மருத்துவமனைகளை, பள்ளிகளை மேம்படுத்துவது, மேம்பாலம், சுரங்கப்பாலம், சாலைகள் போன்ற நல்ல உள்கட்டமைப்புவசதியை உருவாக்குவது தொடா்பான எந்த விஷயமும் குறிப்பிடப்படவில்லை என்று அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT